--- --:--:-- --

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ம் தேதி முதல் அக்.1ம் தேதி வரை நடைபெறும்..!

6

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தொற்று ஏற்படாத வகையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடர், வார விடுமுறை, பண்டிகை விடுமுறை எதுவும் இன்றி தொடர்ச்சியாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரை செப்டம்பர் 14ஆம் தேதியன்று ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். அன்று அவர் மக்களவையில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon