--- --:--:-- --

சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்..!

7

சிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையின் பினாமி தடுப்பு பிரிவு முடக்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த சசிகலா சென்னை போயஸ் கார்டன் மற்றும் புறநகர் பகுதிகளில் பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கியதாக கூறப்படுகிறது.

 

2003 ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை வாங்கிய 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 65 சொத்துக்களை தற்போது வருமான வரித்துறையின் பினாமி தடுப்பு பிரிவு முடக்கியுள்ளது. அதில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள 10 கிரவுண்ட் நிலமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இங்குதான் தண்டனை காலம் முடிந்து வந்த பிறகு சசிகலா தங்குவதற்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இது தவிர கூடுவாஞ்சேரி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் வாங்கப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. த

 

மிழகம் முழுவதும் கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், ஷாப்பிங் மால், திரையரங்கம் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

 

இதில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்ட 1,674 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கியதாக விசாரணைக்கு கூறப்பட்டது. இதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 65 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon