--- --:--:-- --

உலகிலேயே முதன்முறையாக வாடகை தாய் மூலம் சிறுத்தைக்கு பிரசவம்

4

அமெரிக்காவில் உலகிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் முறையில் இரண்டு சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன. அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவை சேர்ந்த கிபிபி என்ற 6 வயது சிறுத்தைக்கு ஒரு சில மருத்துவ காரணங்களால் தாய்மையடைய முடியாத சூழல் ஏற்பட்டது.

 

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதன் சினை முட்டைகளை பிரித்து ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்து, இஸி என்ற 3 வயது சிறுத்தையின் கருப்பைக்குள் ஆய்வாளர்கள் செலுத்தினர். இந்நிலையில் இஸி சிறுத்தை ஆண் மற்றும் பெண் என இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon