தமிழகத்திற்கு கூடுதலாக 15 லட்சத்து 80 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் ஆர்டர்..!
?????????????????????????????????????????????????????????
தமிழகத்திற்கு கூடுதலாக 15 லட்சத்து 80 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் தென்கொரிய நிறுவனத்தின் முதற்கட்டமாக போடப்பட்ட ஒப்பந்தப்படி 15 லட்சம் பிசிஆர் கருவிகள் முழுவதும் வந்தடைந்தன.
இதனைத்தொடர்ந்து கூடுதலாக 10 லட்சம் கருவிகள் வாங்க தென் கொரியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டு கருவிகள் பெறப்பட்டன. பரிசோதனைகள் எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதலாக 15 லட்சத்து எண்பதாயிரம் பரிசோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
தென்கொரிய நிறுவனத்திடம் 12 லட்சமும், அமெரிக்க நிறுவனத்திடம் 1.3 லட்சமும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நிறுவனத்திடம் தலா ஒரு லட்சமும், வெளிமாநிலங்களில் இருந்து 50,000 கருவிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 3.72 லட்சம் கருவிகள் கிடைத்துள்ளன. இந்தமீதமுள்ள கருவிகள் மூன்று வாரத்தில் தமிழகம் வர உள்ளது. தமிழகத்தில் இதுவரை 33 லட்சத்து 60 ஆயிரத்து 450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.







