விஜய் ரசிகர்களிடம் மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள்…!
நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு ரசிகர்களிடம் மீராமிதுன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கவேண்டும் என நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார். மீராமிதுன் சமீபகாலமாக சூர்யா, விஜய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நட்சத்திரங்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
மகேஷ்பாபு விடுத்த சவாலை ஏற்று மரக்கன்று நடும் புகைப்படத்தை நடிகர் விஜய் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் அதற்குப் பெரும் பாராட்டுகள் கிடைத்து வரும் நிலையில் வீட்டிற்குள் மரம் வளர்ப்பதால் எந்த பலனும் இல்லை எனவும் நடிகர் விவேக்கை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் எனவும் விஜய்க்கு எதிரான வகையில் மீராமிதுன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இரண்டு நபர்களை ஒப்பிடுவது தவறானது என குறிப்பிட்ட விவேக் அதற்காக விஜய் மற்றும் மகேஷ்பாபுவின் ரசிகர்களிடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.







