பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..ஓபிஎஸ் கண்டனம்..!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திமுக அரசு சீரழித்து உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்கூட்டத்தில் இளைஞரணியைச் சேர்ந்த இருவர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதில் ஆளும் கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி குற்றம் செய்வோரை கொள்ளாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனவும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்து துரித நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சரை பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.





