தமிழகத்தில் பட்டாசு விபத்துகளில் சிக்கி ஒருவர் மரணம், 544 பேர் காயம்!
தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்தபோது 254 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் மட்டும் 102 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்ததில் 544 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேநேரம் ஒருவர் உயிரிழந்தார் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தீ விபத்துகள் குறைந்துள்ளதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.





