--- --:--:-- --

காதலர் உடன் கைகோர்த்து போட்டோ வெளியிட்ட சுனைனா..!

10

டிகை சுனைனா தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலமாக பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்த அவர் தற்போது படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது.

 

அதிக அளவில் வெப் சீரிஸ்களில் தான் சுனைனாவை சமீப காலத்தில் பார்க்க முடிகிறது. சமீபத்தில் இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் சீரிஸில் அவர் நடித்து இருந்தார்.

 

சுனைனா தற்போது ஹோட்டல் ஒன்றில் காதலர் உடன் கைகோர்த்து இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இருப்பினும் அவர் யார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.

 

சுனைனா இப்படி பதிவிடுவது முதல் முறை அல்ல. நான்கு மாதங்களுக்கு முன்பு இதே போல ஒரு பதிவை அவர் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டார். அவர் எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல youtuber காலித் என்பவரை தான் காதலித்து வருகிறார் என கூறப்படுகிறது. சுனைனாவின் பதிவுக்கு காலித் கமெண்ட் செய்து இருப்பதால் அவர்கள் காதல் தற்போது உறுதி ஆகி இருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Right Menu Icon