--- --:--:-- --

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூருக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

2

மிழகத்தில் 8 ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஆணையைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் கே.கோபால் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கலைச்செல்வி மோகன், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த த.சினேகா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

செங்கல்பட்டு சார் ஆட்சியராகப் பணிபுரிந்து வந்த எஸ்.மாலதி ஹெலன், பதவி உயர்வு பெற்று அதே செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியராக இருந்த கு.ரவிகுமார், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அதேபோல மத்திய அரசுப் பணியிலிருந்து திரும்பிய சந்திர சேகர் சாகமூரி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலாளராக அ.சண்முக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Right Menu Icon