நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு மீண்டும் கடிதம்
நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்பி வைத்திட கூறி ஆளுநர் ஆர்என் ரவிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு குறித்து இரு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய போதும் இது தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பேசிய பிறகும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காதது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர்கள் இருவர் சந்தித்து வலியுறுத்திய போதும் குறிப்பிட்ட காலத்திற்குள் நீட் விலக்கு மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியான பதிலை ஆளுநர் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பினையும் கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் பங்கேற்க வில்லை என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் ஆன உறவு தொடர்ந்து இலக்கமாகவும் சுகமாகவும் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





