40 நாட்கள் இல்லாத அளவுக்கு டெல்லியில் புதுவேகம் எடுக்கும் கொரோனா.!
டெல்லி பள்ளிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக தகவல் அளித்து சம்பந்தப்பட்ட பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளார். கடந்த 40 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்று டெல்லியில் புதிதாக 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் முக கவசம் அணிதலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், அடிக்கடி கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் புது வேகம் எடுக்கும் பரவலை அரசு கண்காணித்து வருவதாக தெரிவித்தார். பள்ளி கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





