விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!
திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் அலுவலகத்தை அடையாளம் தெரியாத நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் மாநில நிர்வாகி அரசு மற்றும் கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அலுவலகத்தை அடித்து சூறையாடிய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் ராஜா என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





