மூடப்படாத மழைநீர் வடிகாலில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த விவகாரம்.!
சென்னை எழும்பூர் அருகே மூடப்படாத மழைநீர் வடிகாலில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பான புகார் மனு மீது உரிய முடிவெடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் மழைநீர் வடிகாலை மூடாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உயிரிழந்த இருவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கவும் குறிப்பிட்டிருந்தது.
ஆழமான விசாரணைக்கு வந்த நிலையில் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு புதிதாக புகார் மனுக்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.






