அரிசியில் மோடி – ட்ரம்பின் தத்ரூப படம்!
அகமதாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரம்பின் உருவங்களை அரிசியில் படைத்துள்ளார். வெங்கடேஷ் என்ற அந்த இளைஞர் நுண்கலை ஓவியத்தை படைப்பதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்கும் விதமாக டிரம்பும், மோடியும் சேர்ந்திருக்கும் உருவத்தை அரிசியால் தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.
இதை டிரம்புக்கு பரிசாக கொடுக்கவும் அந்த இளைஞர் திட்டமிட்டிருக்கிறார். இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோவையை சேர்ந்த தையல் கலைஞர் ஒருவர் பருத்தித் துணியால் ஆன ஆடையை பரிசாக அனுப்பியுள்ளார்.

வேட்டைகாரன்புதூர் என்ற இடத்தில் வசிக்கும் முதியவர் விஸ்வநாதன் மறைந்த முன்னாள் முதல்வர் காமராசர், நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு பருத்தித்துறையில் ஆன ஆடைகளை அவரே தைத்து பரிசாக வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் திங்கட்கிழமை அன்று இந்தியா வரும் அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாக அதற்கு பருத்தி துணியாலான ஆடையை பரிசாக அனுப்பி உள்ளார்.
இந்திய பாரம்பரியமிக்க உடையை அனைத்து துறையில் இருக் தலைவர்களும் அணியவேண்டும் என்பதை தன்னுடைய நோக்கம் என விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.





