ஊரடங்கு அறிவிப்பு ரத்தாகிறது…? பிரதமர் மோடி முடிவு…?
ஊரடங்கு விலக்கு பற்றி பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு மூன்று முறை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த 11 ம் தேதி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, 2ம் கட்ட ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
நாடு முழுவதும் ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு உள்ளது. ஆனால் கொரோனா தொற்று வேகம் குறைந்தாலும்,பரவுவதை தடுக்க முடியவில்லை. இந் நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா? ரத்து செய்யலாமா? என்பது பற்றி காணொலி காட்சி வழியாக அனைத்து முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்.






