--- --:--:-- --

வில்லிவாக்கத்தில் விஜய் ரோடு ஷோ – வாக்கு சேகரிப்பு

5

சென்னை வில்லிவாக்கத்தில் த.வெ.க தலைவர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டு வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்கு சேகரித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில் த.வெ.க தலைவர் விஜய் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வண்டலூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து இன்று மாலை கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

 

திறந்த வேனில் சென்றபடி வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்னர் வேனில் இறங்கி சிறிது தூரம் சாலையில் நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் கடைசி நாளான நாளை(ஏப். 21) விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்யவுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon