தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மோடி மற்றும் ஜோபைடன்..!
பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தமிழக சகோதர சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் என வாழ்த்து செய்தியில் கூறியிருக்கும் மோடி புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை பிரகாஷ் ஜவடேகர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ், பெங்காலி மியான்மரின், தாய்லாந்து என பல்வேறு தரப்பு மக்களுக்கும் தன் மனைவியுடன் இணைந்து வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.






