--- --:--:-- --

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் 3 வது நாளாக வெள்ளப்பெருக்கு.கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட நிர்வாகம் !!!

21

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

 

அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததை அடுத்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளின் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது.இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும்,பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

 

இந்த நிலையில் 3 வது நாளாக இன்றும் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவான 32 ஆயிரம் கன அடி நீர் அப்படியே 4 மதகுகளின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.இதன் காரணமாக பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

மேலும்,3 வது நாளாக பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளான தேக்கம்பட்டி,நெல்லித்துறை,ஓடந்துறை,சிறுமுகை,வச்சினம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரப்பகுமிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க காவல் துறை,வருவாய்த்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை ஒட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை எஸ்.பி அருளரசு உதகை சாலையில் உள்ள கொரோனா தடுப்பு சோதனைச் சாவடிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது,போலி இ பாஸை கண்டுபிடிப்பது குறித்து காவல் துறையினருக்கு விளக்கமளித்தார்.

பின்னர்,பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கு குறித்து பேரிடர் மேலாண்மைத்துறையினருடன் இணைந்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.ஆய்வின் போது மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன்,எஸ்.ஐ.க்கள் திலக்,பிரபாகர்,சிறப்பு காவலர்கள் கண்ணன்,சண்முகம்,விஜய் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon