--- --:--:-- --

அச்சங்குடி அருகே மின்மாற்றியை சுற்றி புதர்மண்டி சீமைகருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

23

திருவாடானை அருகே மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அச்சங்குடி கிராமத்திற்கும் தினையத்தூர் கிராமத்திற்கும் இடையில் உள்ள ஒரு மின் மாற்றியை சுற்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டியிருக்கிறது.

 

இந்த மின்மாற்றி மூலம் அச்சங்குடி, திணையத்தூர், அதனை சுற்றியுள்ள பகுதி கிராமங்களுக்கு மின்சாரம் செல்கிறது. அவசர காலங்களில் ஏதாவது இந்த மின் மாற்றியில் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வதில் சிக்கல் உள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

Leave a Reply

Right Menu Icon