--- --:--:-- --

தாலிக்கு தங்கம் திட்டம் தொடரும்! தங்கம் கொள்முதல் செய்யும் பணிதுவக்கம்!! – சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேட்டி!!!

15

சிவகங்கை ஆட்சியர் கூட்டரங்கில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறைக்கான பணிகள் குறித்த ஆய்வினை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மேற்கொண்டார். முன்னதாக மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சரோஜா வழங்கினார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சரோஜா,குற்றம் குற்றமே செய்தியில் வெளியான மானாமதுரையில் நான்கு வழி சாலையில் கொட்டபட்ட இணை உணவு முறைகேடுகள் குறித்து கேட்ட பொழுது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அனைத்து அங்கன்வாடி சத்துணவு மையங்களும் சோதனை மேற்கொள்ளபட்டது என தெரிவித்தார்.

பின்பு தாலிக்கு தங்கம் திட்டம் தொடரும் எனவும் அதற்கான தங்கம் கொள்முதல் செய்யும் பணியினை துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். காலியாக உள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த அமைச்சர் சரோஜா, சத்துணவில் முட்டை கொடுக்கும் பணி முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி நடைபெறும் என தெரிவித்தார்.

 

மேலும் முதல்வரின் வேண்கோளை ஏற்று மத்திய அரசு மதுரையில் மாற்று திறனாளிகள் மறுவாழ்விற்கு ஒருங்கிணைந்த மையத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்தார். இது தென் மாவட்ட மாற்று திறனாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் எனவும், இந்த மையத்தை முதலமைச்சர் துவக்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon