--- --:--:-- --

தோசையை சுட்டு பறக்கவிட்டு கவனத்தை ஈர்க்கும் மாஸ்டர்..!

12

தோசையை சுட்டு தான் பார்த்திருப்போம். ஆனால் மும்பை மங்கள்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி கடையில் தோசை பறக்கிறது. விறுவிறுப்பாக தோசைக்கல்லில் தோசை சுடும் இளைஞர் நேரடியாக அதனை வாடிக்கையாளர்களின் தட்டுக்கே வீசுகிறார்.

 

ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்தவாரம் பகிரப்பட்ட இந்த பறக்கும் தோசை வீடியோ 8 கோடியே 40 லட்சம் பேரால் கவனம் பெற்றுள்ளது. மேலும் 13 லட்சம் பேர் இந்த வீடியோவிற்கு லைக் போட்டு இருக்கிறார்கள்.

 

வாடிக்கையாளர்களை கவருவதற்காக இப்படி செய்தாலும் உணவை பறக்கவிடுவது அவமரியாதை என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon