தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.அந்த வகையில் நேற்று (ஜூன் 19) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570க்கும், சவரனுக்கு ரூ.3040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,370க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




