--- --:--:-- --

விவசாயிகள் நாளை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்..!

11

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நாளை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் சில பகுதிகளில் 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

மத்திய அரசுடன் விவசாயிகள் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

நண்பகல் முதல் மாலை 4 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 6ஆம் தேதி 3 மணி நேரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி இருந்தனர்.

 

இதற்கிடையே 12வது முறையாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

மேலும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேளாண்துறை அமைச்சராக இருந்த தோமர் மற்றும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Leave a Reply

Right Menu Icon