டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம்..!
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார் மாரியப்பன். சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்.
மற்றொரு இந்திய வீரர் பீகாரை சேர்ந்த சரத்குமார் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை பெற்றிருக்கிறார். உயரம் தாண்டுதல் போட்டியில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார் மாரியப்பன். இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.






