--- --:--:-- --

3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் கேம் விளையாட உத்தரவு..!

11

சீனாவில் 18 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் தினசரி தலா ஒரு மணி நேரம் வீதம் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட வேண்டும் என்ற நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கானோர் அடிமையாகி உள்ளனர்.

 

இதில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன . இந்த நிலையில் இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக சீன அரசு முடிவு எடுத்துள்ளது.

 

இதன்படி 18 வயதிற்கு உட்பட்டோர் ஒரு வாரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆன்லைனில் விளையாடக் கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்படவுள்ளது. 18 வயதிற்கும் கீழ் உள்ளோருக்கான ஆன்லைன் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் இந்த கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

 

இதன்படி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு எட்டு மணியிலிருந்து 9 மணி வரை மட்டுமே ஆன்லைனில் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon