காட்டுத் தீயால் ஏராளமான வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம்..!
காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்குள் பரவியுள்ள நிலையில் நெருப்பை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத் தீயால் ஏராளமான வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. புல்வெளிகள் நிறைந்த பகுதியில் பற்றிய தீ காற்றின் வேகம் காரணமாக அருகிலிருந்த குடியிருப்புகளுக்குள் பரவியது.
சிறிது நேரத்தில் அடுத்தடுத்த வீடுகள் தீப்பிடித்து எரிய தொடங்கின. அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கி உள்ள நிலையில் அந்த பகுதியையே புகை மூட்டத்தால் சூழ்ந்து காணப்பட்டது.






