பெண் காவலரை கத்தியால் வெட்டிய நபருக்கு கை முறிவு..!
நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியில் நடைபெற்ற கோயில் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் நிலைய பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கத்தியால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறுமுகத்திற்கு கை முறிவு ஏற்பட்டது.
கொண்டாநகரம் பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை கைப்பற்ற போலீசார் அழைத்து சென்றபோது ஆறுமுகம் தப்பியோட முயற்சித்ததாகவும் அப்போது பள்ளத்தில் விழுந்து முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆறுமுகத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





