--- --:--:-- --

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

6

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

தென் தமிழகம் டெல்டா மாவட்டங்களில் அதனை ஒட்டிய மாவட்டங்கள் கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் கன்னியாகுமரி, நெல்லை டெல்டா மாவட்டங்கள்அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon