--- --:--:-- --

சிறுமி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோட்டம்..!

1

டலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் இருந்த சிறுமி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பி ஓடியதையடுத்து மாவட்ட காவல்துறையினர் அவரை தேடி வருகிறார்கள். விருத்தாச்சலம் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை அஜீத் என்ற இளைஞர் கடத்தி சென்றார்.

 

மாதா கோவில் திருவிழாவிற்கு ஒலி ஒளி அமைக்கும் பணிக்கு வந்த இடத்தில் அஜீத் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பாக தாய் அளித்த புகாரின் பேரில் அஜித்தின் செல்போன் எண்ணை டிராக் செய்த காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பதுங்கி இருந்து அஜீத்தை கைது செய்துள்ளனர்.

 

அவரைச்சிறையில் அடைப்பதற்காக விருத்தாசலம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் அதிகாலையில் காவல் நிலையத்தில் இருந்து அஜீத் தப்பியோடியுள்ளார். அவரை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon