ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 91 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது..!
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 91 ரூபாயை தாண்டி விற்பனையாளர் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைகளை நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து தொண்ணூற்று ஒரு ரூபாய் 45 காசுகள் விற்பனையாகிறது.
டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 8வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.






