--- --:--:-- --

பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்..!

7

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.

 

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அதே கோரிக்கையை விடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நாட்டில் முதன் முறையாக 2012 – 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

 

ஆனால் சாதி வாரி விபரங்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டு மே மாதம் பாஜக ஆட்சிக்கு வந்த பொழுது காங்கிரஸ் கட்சி பலமுறை கேட்ட பிறகும் அது வெளியிடப்படவில்லை. தற்காலிக சாதிவாரியான புள்ளி விவரங்கள் இருந்தால் தான் அர்த்தமுள்ள சமூக நீதி மற்றும் அதிகாரங்களை அளிக்க திறம்பட அளிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon