தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவியை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்..!
உத்திரபிரதேச மாநிலத்தில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் முன்னாள் எம்.பி.யை மூன்று பேர் சுட்டுக் கொன்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கல்லூரி மாணவி பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஜனால் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவத்தை கொண்டுள்ளது அந்த மாணவி தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பும் பொழுது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாணவி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதாக பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், அரசு சார்பு ஊடகத்தினரும் பாஜகவினரும் மரணத்தை கொண்டாடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளது.





