--- --:--:-- --

3 நாட்கள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்..!

01

மிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மூன்று நாட்கள் பயணமாக நாளை (புதன்கிழமை) தனி விமானத்தில், சென்னையில் இருந்து, டெல்லி செல்ல உள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக ஏற்கனவே, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டும் சந்தித்து விட்டு, மறுநாள் 28 ஆம் தேதி மதியம், சென்னைக்கு திரும்பினார்.

 

இந்த நிலையில் டெல்லியில் வரும் 11ஆம் தேதி வியாழக்கிழமை, நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும், பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். 3 நாட்கள் பயணமாக, நாளை 10 ஆம் தேதி, புதன்கிழமை காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானத்தில், டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

 

 

முதலமைச்சர் விஜய் டெல்லியில் கடந்த முறை சந்தித்து பேசாத குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை, இம்முறை, முதலமைச்சர் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

அதன் காரணமாகவே, முதலமைச்சர் தனது பயணத்தை, 3 நாட்கள் பயணமாக, அமைத்துள்ளதாகவும், டெல்லியில் மூன்று நாட்கள் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, வருகின்ற 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணி அளவில், சென்னைக்கு திரும்பி வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Right Menu Icon