--- --:--:-- --

மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் போராட்டம்..!

3

ராமநாதபுரத்தில் உள்ள இங்கிலீஷ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் மருத்துவக் கல்லூரி தற்பொழுது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

 

எய்ம்ஸ் மாணவர்களுக்கு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்று வகுப்பறைகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு போதுமான வசதிகள் இல்லை எனக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அரசு மருத்துவக் கல்லூரியில் நூலக வசதி, பரிசோதனை கூட வசதி போதுமான அளவு இல்லை என்றும் இதனால் தாங்கள் முறையாக படிப்பை மேற்கொள்ள முடியவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவில்லை என்று மாணவர்கள் கூறினார்.

 

Right Menu Icon