குறைந்தது தங்கம் விலை..!
2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தில் இருந்தது.இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து படிப்படியாக தங்கம் விலை படிப்படியாக குறைந்து வருவது நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் நேற்று முன் தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வார தொடக்கமான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும் சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.104,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





