இட்லி விருந்து ஹோட்டலில் சாம்பாருக்குள் கிடந்த பல்லி..!
கோயம்புத்தூரில் உள்ள தனியார் உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி கிடந்தது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இட்லி விருந்து என்ற தனியார் உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்திற்கு நேற்று இரவு நண்பர்களுடன் சென்ற அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் இட்லி சாம்பார் பார்சல் வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது சாப்பிடுகின்ற பொழுது சாம்பாரில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக பார்சலை எடுத்து சென்று அவர்களிடம் முறையிட்டபோது அவர் கள்ளத்தனமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக ஏழுமலை தெரிவித்துள்ளார்.





