முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை..!
கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடுமுழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரொனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரொனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இன்று நடைபெறும் கூட்டத்தில் கொரொனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் மாநிலங்களின் மருத்துவ கட்டமைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





