திராவிட மாடல் 2. 0 ஆட்சி அமைப்போம் – ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இன்று கழக வாக்குச்சாவடி முகவர்களுடன் (BLA 2) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
கால் பிரிட்ஜிங் (Call Bridging) நவீனத் தொழில்நுட்ப முறையில் ஒரே நேரத்தில் 75000- BLA 2-களுடனும் அலைபேசி வாயிலாக நேரடியாகப் பேசிய முதலமைச்சர், திராவிட மாடல் 2.O ஆட்சி அமைத்திட இந்த 2 நாட்கள் முழு மூச்சுடன் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றும்படி கூறினார்.






