மு.க. ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..!
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வந்துள்ளார். தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அவர் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.
இதுபற்றி கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் குறித்து நாங்கள் ஒரு பொதுவான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளோம். நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில், அவரது அர்ப்பணிப்புமிக்க நல்லாட்சி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.





