--- --:--:-- --

எம்.எல்.ஏ.க்களை திருடும் விஜய் தான் களவாணி – இ.பி.எஸ்

3

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ-க்களை திருடும் முதலமைச்சர் விஜய் தான் களவாணி. அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு த.வெ.க-வுக்கு சென்றவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார் விஜய். 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால். பிற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை இரவல் வாங்கி ஆட்சி நடத்துகிறார்.

 

 

விஜய் ஆக்கப்பூர்வமாக எதுவும் பேசாமல், வெறும் பன்ச் டயலாக் பேசுகிறார். முதலமைச்சர் அந்தஸ்துக்கே அவர் வரவில்லை. தி.மு.க கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் சுய லாபத்திற்காக த.வெ.க அரசில் இணைந்துள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான இயக்கம் காங்கிரஸ் என்றார்.

Leave a Reply

Right Menu Icon