உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட இடதுசாரிகள் திட்டம் – வீரபாண்டியன்
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தங்களது கட்சியின் உண்மையான பலத்தைச் சோதித்துப் பார்க்கும் நோக்கில் இத்தகைய முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.






