பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை – அமைச்சர் ரமேஷ்
பழநி அடிவாரம் தண்டபாணிசாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக பதிவு செய்த வழக்கு. அமைச்சர் ரமேஷின் உறவினர்களுக்கு தொடர்பு என சில கட்சிகளால் பொய் செய்தி பரப்பப்படுகிறது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அமைச்சர் ரமேஷ் பெயருக்கு களங்கம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தை பதிவு செய்த தனிநபர்கள் மீது துறைரீதியில் நடவடிக்கை, போலீசார் விசாரணை என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தனக்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லாத விஷயத்தில் வன்மத்துடன் தொடர்புப்படுத்தி செய்தி பரப்புவதாக அமைச்சர் ரமேஷ் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.






