உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட நிலச்சரிவு..!
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சமோலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
பாஸ்போர்ட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சாலையை சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






