கோவையில் காக்கைகளிடமிருந்து ஆந்தையை காப்பாற்றிய சிறுவன்..!
கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சியில் காக்கைகளிடம் சிக்கி உயிருக்கு போராடிய ஆந்தையை மீட்ட பள்ளி மாணவனுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஹரிஹர பிரியன் என்ற பத்தாம் வகுப்பு மாணவன் சத்தம் கேட்டு பார்த்தபோது காக்கைகள் கூட்டமாக ஆந்தையை பறந்து பறந்து துரத்திக் கொண்டிருந்தது.
இதனைக் கண்ட அந்த மாணவன் காக்கைகளை விரட்டி விட்டு தண்ணீர் கொடுத்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ஆந்தையை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அதற்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் பறக்க விட்டனர்.






