--- --:--:-- --

ஐயா படத்தில் தொடங்கி உச்ச நட்சத்திரமாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

4

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். ஐயா படத்தில் தொடங்கி நீண்டகாலமாக தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

 

கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரின் ஐயா திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் பயணத்தை தொடங்கியவர் நடிகை நயன்தாரா. இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். தொடக்கத்திலிருந்து நடிப்போடு சேர்த்து காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார் நடிகை நயன்தாரா.

 

ஆனால் நடிகை நயன்தாராவின் காதல் பல நேரங்களில் கசப்பானதாக அமைந்தது.சிம்புவுடன் உயிருக்குயிரான காதல் கசந்தது. பிரபுதேவா பெயரை பச்சை குத்தும் அளவிற்கு காதலித்த நயன்தாரா ஏதோ சில காரணங்களால் அவரையும் பிரிந்தார். இப்படி சர்ச்சைகளில் சிக்கினாலும் நடிப்பில் எப்போதுமே முழு கவனம் செலுத்தி வந்த நயன்தாரா பல இளம் நடிகைகளுக்கு முன்மாதிரியாக மாறினார்.

 

தொடக்கத்தில் ஹீரோக்களுடன் டூயட் பாடுவது போன்ற வழக்கமான பாணியில் நடித்து வந்த நயன்தாரா, கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறம், இமைக்காநொடிகள் போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.

 

நயன்தாராவின் சாதனை பயணம் மேலும் தொடர்ந்து கொண்டிருக்க, தற்போது அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு நாடு நாடாக பயணித்துக் கொண்டிருக்கின்றார்.சர்ச்சையில் சிக்கும் போது வசைபாடியவர்களை தனது ரசிகர்களாக மாற்றிய நயன்தாரா மேலும் பல நல்ல படங்களில் நடித்து தமிழ்த் திரை உலகை ஆள வேண்டும் என்பதே அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Right Menu Icon