தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல்.. பெற்றோருக்கு அதிர்ச்சி..!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வட மாநில தம்பதியின் ஒன்பது மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள வல்லாரி கிராமத்தில் ரோஹித் சஞ்சு என்ற வட மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். செங்கல் சூலையில் கூலி வேலை செய்து வந்த இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தையும், ஒன்பது மாத பெண் குழந்தையும் உண்டு.
இந்த நிலையில் இவர்கள் அருகில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத குழந்தை மாரியம்மாள் அதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அளித்த புகார் அடிப்படையில் குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.





