நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்ட கமல்..!
சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்க வில்லை என்றாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது.
தேர்தல் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்பேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. மக்கள் நீதி மையத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா நாளில் நடைபெறும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.






