கோகைன் போதை மருந்து வைத்திருந்ததாக பமீலா கோஸ்வாமி கைது..!
கோகைன் போதை மருந்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணி பொதுச் செயலாளரான பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவின் நியூ அலிப்பூர் பகுதியில் அவர் தனது தோழியுடன் வந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது சில லட்சங்கள் மதிப்புள்ள போதை பொருளை தமது பர்சில் அவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள மாநில பாஜக நிர்வாகிகள் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். 2019 பாஜகவில் சேர்வதற்கு முன் பமீலா கோஸ்வாமி விமான பணிப்பெண்ணாகவும், டிவி சீரியல் நடிகையாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






