--- --:--:-- --

இணைந்த கைகள், நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச தடுப்பூசி முகாம்

8e13a562-e953-4f7c-816e-400f2e3a4074

விநாசி அருகே வஞ்சிபாளையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையத்தில், தனியார் சார்பில் பொதுமக்களுக்கான இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அவிநாசியில் உள்ள இணைந்த கைகள் அமைப்பு மற்றும் வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த முகாமை, ஒன்றிய கவுன்சிலரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடியுமான முத்துசாமி, தொடங்கி வைத்தார்.

 

முகாம் ஏற்பாடுகளை செய்திருந்த நண்பர்கள் குழு அறக்கட்டளை நிர்வாகிகள் சிவக்குமார், இராஜகோபால், சரவணன் மற்றும் பிரபு உள்ளிட்டோர், வரவேற்று பேசினர். அவிநாசி டாக்டர்கள் குகப்ரியா, முருகானந்தம் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இணைந்த கைகளின் ஒருங்கிணைப்பாளர் சந்தீப், பூங்கொத்து கொடுத்து பயனாளிகளை வரவேற்றார்.

இம்முகாமில், கோவையை சேர்ந்த சி.எஸ்.ஆர். கிளினிக் மருத்துவக்குழுவினர், பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாம் வாயிலாக, பொதுமக்கள் 270 பேருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி முகாம் நிறைவில், இணைந்த கைகள் அமைப்பின் சிவா மற்றும் ரவிக்குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தார்.

 

இணைந்த கைகள் அமைப்பினர், நண்பர்கள் குழு அறக்கட்டளையினரின் இந்த சேவையை, வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Leave a Reply

Right Menu Icon