--- --:--:-- --

பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா..?

13

டிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

 

பிரபல நடிகர்களுடன் நடிப்பதன் மூலம் மட்டும் அறியப்படாமல் திறமையான நடிப்பால் அறியப்பட்ட அவர் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான மகாநதி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதைப் பெற்றார்.

 

தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon